உணவு பொதியிட பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பொலித்தின்களின் (லஞ்ச் ஷீட்) பயன்பாட்டிற்கான தடை இன்று (01) முதல் இலங்கையில் அமுலுக்கு வந்துள்ளது.
அதற்கிணங்க பொலித்தின்களின் (லஞ்ச் ஷீட்) உற்பத்தி,விநியோகம்,விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள லஞ்ச் ஷீட்களை விற்க ஒரு மாத கால அவகாசத்தை அதிகாரிகள் வழங்கியிருந்தனர்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் நுகர்வோர் அதிகார சபையுடன் இணைந்து உணவு பொதியிட பயன்படுத்தப்படும் பொலித்தின்கள் இன்னும் நாட்டில் உற்பத்தியில் உள்ளனவா என்பதை கண்டறிய சிறப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
மேற்படி உத்தரவுகளை மீறி அவற்றை தயாரித்து விநியோகிபோருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் 10 மில்லியனுக்கும் அதிகமான உணவு பொதியிட பயன்படுத்தப்படும் பொலித்தீன்கள் நாட்டின் சூழலில் வெளியேற்றப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.