January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் ஊடகவியலாளர் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் (01)யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இந்த நினைவஞ்சலி நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி, சுடரேற்றப்பட்டது.

யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்.மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது வீட்டிற்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுததாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில்  கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.