
இலங்கையில் இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாகாணங்களுக்கு இடையே விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் நாளை முதல் அரச ஊழியர்கள் அனைவரையும் பணிகளுக்கு அழைக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ள காரணத்தினால் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தொழிலுக்கு செல்வோருக்காக மட்டுமே இந்த சேவைகள் இடம்பெறும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை முழுமையாக தளர்த்துவது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.