
ராஜகிரிய மேம்பாலம் அருகே ஏற்பட்ட விபத்து தொடர்பாக பிரபல பாடகி உமரியா சின்ஹவன்ச வெலிக்கடை பொலிஸாரால் சனிக்கிழமை (31)மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
உமரியாவின் வாகனம் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மோதியதில் அதன் சாரதி காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.