சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் மேலதிக டோஸை வழங்குமாறு கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த சில நாட்களாக, கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டுள்ள வைத்தியர்கள் உள்ளிட்ட கணிசமான சுகாதார ஊழியர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகி வருவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் குறிப்பிட்ட சில நாடுகள், புதிய கொவிட் மாறுபாடுகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் வகையில், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை (3 வது டோஸ்) வழங்கும் முடிவுகளுக்கு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, அதிக ஆபத்தில் இருக்கும் அனைத்துப் பிரிவு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற முன்கள ஊழியர்களுக்கும் கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை வழங்குவதற்கான சாத்தியத்தை ஆராயுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளது.