January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சரத் வீரசேகரவின் அமைச்சின் கீழ் இயங்கிய இரு முக்கிய துறைகள் நீக்கம்; விசேட வர்த்தமானி வெளியீடு!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் அமைச்சின் கீழ் இயங்கிய இரு துறைகள் நீக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதை அறிவிக்கும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் கடந்த 27 ஆம் திகதி இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியில், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பல்நோக்கு மேம்பாட்டு செயலணி ஆகியவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சரத் வீரசேகர இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு பொறுப்பான அமைச்சராக மாத்திரமே செயற்படுவார்.