November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ‘அஸ்ட்ரா செனெகா’தடுப்பூசிகளின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்தது!

ஜப்பானில் இருந்து  728,460 “அஸ்ட்ரா செனெகா” கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இன்று இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இந்த தடுப்பூசி டோஸ்கள், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL455 விமானத்தின் மூலம் ஜப்பானில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் டோக்கியோவில் உள்ள ஜப்பானுக்கான இலங்கை தூதர் சஞ்சீவ குணசேகர உள்ளிட்ட குழுவின் முயற்சியால் நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

உற்பத்தி செய்யப்பட்ட 1.4 மில்லியன் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசிகளை கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்குவதாக ஜப்பான் உறுதியளித்ததற்கு அமைய இதன் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்த தடுப்பூசி டோஸ்கள் ஏற்கனவே “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசியின் 1 வது டோஸை பெற்றுக் கொண்டு காத்திருப்பு பட்டியலில் உள்ள 4 90,000 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் 2 வது டோஸாக வழங்கப்படும் என்றார்.

மீதமுள்ள தடுப்பூசிகள் கேகாலை மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு ஜப்பான், உறுதியளித்ததன் படி மீதமுள்ள “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசி டோஸ்கள் ஆகஸ்ட் 07 நாட்டை வந்தடைய உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.