February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்துடன் காலணிகள் தயாரிக்கவில்லை’: நைக்கி நிறுவனம் மறுப்பு

நைக்கி சின்னம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் தாங்கிய ஒரு ஜோடி காலணிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியமை குறித்து இலங்கையின் வெளியுறவு அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வீடியோவில் சித்தரிக்கப்பட்ட காலணிகள் நைக்கி காலணி நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை என்பதை விசாரணையின் போது, நைக்கி உறுதிப்படுத்தியுள்ளது.

தமது புலமைச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நிறுவனத்தின் நடைமுறைக்கு ஏற்ப பொருத்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நைக்கி நிறுவனம், இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்துள்ளது.