November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை உட்பட உலகளாவிய நாடுகளில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகம் இன்று (31) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பயணக்கட்டுப்பாடு தளர்வு மற்றும் சீரற்ற தடுப்பூசி திட்டம் ஆகியவை கொவிட் பரவலை அதிகரிக்கும் காரணிகள் என எச்சரித்துள்ளது.

கடினமான கட்டுப்பாடுகள் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றிகள் தற்போது ஆபத்தில் உள்ளதாகவும் சுகாதார துறை நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

 

இதற்கிடையில், கடந்த வாரம் கிட்டத்தட்ட 4 மில்லியன் கொவிட் தொற்றுகள் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு  அறிவிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

இந்த உயர்வு தீவிரமடையும் டெல்டா வைரஸ் வகையால் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 200 மில்லியனை கடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.