January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் இசுரு உதான

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஏஷ்லி டி சில்வா இதனை உறுதி செய்துள்ளார்.

33 வயதான இசுரு உதான, இதுவரையில் 21 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 35 இருபது 20 போட்டிகளிலும், 10 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான சர்வதேச போட்டித் தொடரில் இசுரு உதான, உபாதைக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்காக விளையாடி, 2019 ஆம் ஆண்டு இருபது 20 இன்னிங்ஸ் ஒன்றில் 9 ஆவது விக்கட்டுக்கான அதிக ஓட்டங்களாக 57 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பெற்ற சாதனையை இசுரு உதான நிகழ்த்தியுள்ளார்.