இலங்கை ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தலை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று கத்தோலிக்க பேராயர்கள் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கத்தோலிக்க பேராயர்கள் மன்றம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை ஆசிரியர் சங்கங்கள் இணையவழி கற்பித்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்டுள்ளனர்.
நாட்டின் எதிர்காலத்தைக் கையாளும் திறமையான மாணவர்களை உருவாக்கும் பொறுப்பை ஆசிரியர்கள் சிந்தித்து, கற்பித்தலை முன்னெடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறும் கத்தோலிக்க பேராயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குழந்தைகளை நாட்டுக்கு பயனுள்ள குடிமக்களாக வடிவமைப்பதில் ஆசிரியர்கள் பிரதான பங்கு வகிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.