July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ‘டெல்டா’ தொற்றாளர்கள் இருக்கலாம்: சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

இலங்கையில் நான்கு ஆயிரத்திற்கும் அதிகமான டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு கொவிட் வைரஸ் அலைகளை விடவும் தற்போது மோசமான நிலையொன்று நாட்டில் காணப்படுவதாகவும், நாடு அச்சுறுத்தல் நிலையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முறையான பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டால், தற்போது வரையில் நான்காயிரத்திற்கும் அதிகமான டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சிறுமியின் மரணத்துக்கு நியாயம் கோரி மலையகத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும், குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாகவும், அவர்களின் போராட்டத்தில் நியாயம் இருந்தாலும், தற்போதுள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது ஆரோக்கியமான விடயமல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.