
இணையவழி குற்றங்களால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை அடுத்து, இணையவழி கற்கைகளுக்காக மாணவர்களுக்கு கணினி மற்றும் இணைய வசதிகள் கிடைத்ததால் இவ்வாறான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கணினி அவசர தயார்நிலை அணியின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரவிது மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் ஆபாச படங்களைப் பார்க்கும் வீதம் அதிகரித்துள்ளதாகவும் கணினி அவசர தயார்நிலை அணி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டு இணையவழி குற்றங்கள் தொடர்பாக தமக்கு 8700 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.
பேஸ்புக், மெசென்ஜர், வாட்ஸ்அப், வைபர், ஐஎம்ஓ போன்ற சமூக ஊடகங்கள் மூலம் ஆபாசக் காட்சிகள் பகிரப்படுவது தெரியவந்துள்ளதாகவும் ரவிது மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.