June 14, 2025 0:00:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் முன்னணி நடிகை ஹயசின்த் விஜேரத்ன காலமானார்

இலங்கையின் முன்னணி நடிகை ஹயசின்த் விஜேரத்ன நேற்று இரவு காலமானார்.

75 வயதுடைய ஹயசின்த் விஜேரத்ன வாகன விபத்தொன்றில் சிக்கி, உயிரிழந்துள்ளார்.

நாடக படப்பிடிப்பு ஒன்றுக்காக நுவரெலியா சென்று திரும்பும் போது, அவர் பயணித்த வாகனம் குடைசாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் வாகன சாரதி லிந்துல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நடிகையின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பொலிஸாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.