இலங்கையின் அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வடமராச்சி வடக்கு கிராம சேவகர் பிரிவு இன்று காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டது.
புதிதாக ஒரு பிரதேசமும் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் நாட்டின் அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.