
இலங்கைக்கான கனடாத் தூதுவர் டேவிட் மெகினொன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் கொழும்பில் வெள்ளிக்கிழமை(30) நடைபெற்றது.
மதிய போசனத்துடன் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கனடா இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டன என்று ரவூப் ஹக்கீம் எம்.பி.தெரிவித்தார்.
சுமார் இரு மணிநேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது எனவும் அவர் மேலும் கூறினார்.