நாட்டில் அத்தியாவசிய சேவைகளை பெற்றுக் கொள்ள முனையும் சகலரும் கொவிட் தடுப்பூசியை ஏற்றியாக வேண்டும் என்ற விதிமுறைகளை கையாள்வது குறித்து கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
கட்டாயமாக யாரையும் வற்புறுத்தி கொவிட் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு கூற முடியாது.ஆகவே அத்தியாவசிய தேவைகளில் ஈடுபட தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற வரையறைகளை கொண்டுவர முடியும் என கொவிட் தடுப்பூசி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
கொவிட் -19 வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படுவது குறித்து கட்டாய சட்டங்களை பிறப்பிக்க முடியாது.அவ்வாறான கட்டாய சட்டங்கள் நாட்டில் நடைமுறையிலும் இல்லை.இனிமேலும் அவ்வாறான சட்டங்களை கொண்டுவருவது குறித்து ஆராயப்பட வேண்டம்.எனினும் பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக திரையரங்குகளுக்கு செல்வது, பல்பொருள் அங்காடி, ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தும் பகுதிகளுக்கு செல்வதென்றால் கண்டிப்பாக தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டும் என்ற வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.அவ்வாறான வேலைத் திட்டங்களை இங்கு நாம் கையாள முடியும். ஆனால் மிகக் கவனமாக இவற்றை ஆராய்ந்து கையாள வேண்டியுள்ளது.அது குறித்து கொவிட் செயலணிக் கூட்டத்தில் ஆராய்ந்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.