January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாவை சேனாதிராஜா -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் சந்திக்கவுள்ளனர்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம் இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழ் தேசிய கட்சிகளிற்குள் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி நடந்து வரும் நிலையில்,அண்மையில் நடைபெற்ற சந்திப்புகளில் கஜேந்திரகுமார் அணியினர் பங்குகொண்டிருக்காது ஒதுங்கி நின்ற நிலையில்,அவர்களுக்கு தெளிவூட்டும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக முன்னணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.