July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 6 மாதங்களில் 4700 முறைப்பாடுகள் பதிவு!

சிறுவர்கள் மீதான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து இந்த வருடத்தில் முதல் 6 மாத காலப் பகுதியில் இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 4700 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனர்.

இவற்றில் 73 முறைப்பாடுகள் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பானது என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித் விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணத்தை தொடர்ந்து சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு சபையினால் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் வீடுகளில் பணியாற்றும் சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை சேகரித்து வரும் அதிகார சபை அவ்வாறு சிறுவர்களை பணியாளர்களாக வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கையெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.