January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு பாராட்டு

Photo: Facebook/ WHOSriLanka

ஒரே நாளில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்தியமைக்காக உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையை பாராட்டியுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினத்தில் 515,830 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்பட்டுள்ளது.

அதன்படி சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 418,494 பேருக்கும், 2 ஆவது டோஸ் 56,738 பேருக்கும், பைசர் தடுப்பூசி 38,430 பேருக்கும், மொடர்னா தடுப்பூசி 2,168 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதிகளவான தடுப்பூசிகளை செலுத்தும் வேலைத்திட்டத்தை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளது.