400 மில்லியன் ரூபா பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் களுத்துறை குற்றவியல் விசாரணை பிரிவு ஆகியன இணைந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்போது 40 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
டுபாயில் இருந்து செயற்படுத்தப்படும் போதைப் பொருள் வியாபாரத்துடன் இது தொடர்புடையதாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.