தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 21 முதல் அமுலுக்கு வரும் வகையில், எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குற்றத் தடுப்பு மற்றும் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.