November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 10 மாவட்டங்கள் டெங்கு நோய் அபாய வலயமாக அடையாளம்

நாட்டில் கொழும்பு உட்பட பத்து மாவட்டங்கள் டெங்கு நோய் அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021 ஆம் ஆண்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 16,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அதேநேரத்தில் ஜூன் மாதத்தில் மாத்திரம் 2,997 நோயாளிகளும், ஜூலை மாதத்தில் 3,029 நோயாளிகளும் பதிவாகியுள்ளன.

இதனிடையே நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளில் 70 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.