January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் விடுதலையை வலியுறுத்தி 11 சர்வதேச அமைப்புகள் அறிக்கை

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் விடுதலையை வலியுறுத்தி 11 சர்வதேச அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அம்னெஸ்டி இன்டர்நெஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், ஆர்டிகல் 19 உட்பட 11 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளன.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இந்த அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இலங்கையில் சிறுபான்மையினர் உரிமைகள் மீறப்படுவது கவலை தருவதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் உட்பட 11 அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக எவ்வித சாட்சியங்களும் இல்லாத நிலையில், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.