
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் பிரதானியும், ஜனாதிபதியின் ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்தார்.
அதன்படி 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசியளிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தின் திறப்பு நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.