
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிகோரி கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை – கந்தலோயா தோட்டத்தில் பாடசாலை மாணவர்களினால் ஆர்ப்பாட்டப் பேரணியும், வீதி நாடகமும் நடத்தப்பட்டது.
கந்தலோயா தமிழ் மகா வித்தியாலய மாணவர்களும் யாழ்ப்பாணம், கிழக்கு,தென்கிழக்கு மற்றும் பேராதனை பல்கலைகழகங்களில் பயிலும் மாணவர்களும் இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது அவர்கள் ஹிஷாலினி எவ்வாறான துன்பங்களை எதிர்நோக்கியிருப்பாள் என்பதனை எடுத்துக்காட்டும் முகமாக வீதி நாடகத்தை அரங்கேற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் அந்த பாடசாலையில் இருந்து கல்வி கற்றுப் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.