
பாதுகாப்பு பிரிவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அமைச்சர் விமல் வீரவன்ச, தன்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.
அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் நெருங்கிச் செயற்பட்டதால், தன்னை 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்வதாக விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்சவின் அலுவலகம் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.