January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கிறது’: இராணுவத் தளபதி

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,919 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் புத்தாண்டு கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இதனால், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசிமாகும் என்று அவர்  வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆறு வாரங்களுக்குப் பின்னர்  நேற்று 1,900 ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.