July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கல் கொத்தணியின் பெறுமதி தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கல் கொத்தணியின் பெறுமதி தொடர்பாக முரண்பட்ட கருத்துக்களை இரத்தினக்கல் துறைசார் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக்கல் கொத்தணி இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

510 கிலோ கிராம் எடை கொண்ட இரத்தினக்கல் கொத்தணி 2000 கோடி இலங்கை ரூபாய் பெறுமதியுடையது என இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், குறித்த இரத்தினக்கல் கொத்தணி இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை கூறும் அளவுக்கு பெறுமதி உடையதல்ல என்று துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கல் கொத்தணியின் கற்கள் உயிரிழந்துள்ளதாகவும், அது பெறுமதியுடையது அல்ல என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அருங்காட்சியகம் ஒன்றில் வைப்பதாயின் இந்த இரத்தினக்கற்கள் 10 இலட்சம் வரை பெறுமதியாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.