January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய ‘ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம்’ திறந்து வைக்கப்பட்டது

புதிய ‘ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம்’ இன்று திறந்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் உத்தியோகபூர்வமாக புதிய ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் இருந்து வெளியிடப்படும் என்று ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக மத்திய நிலையம் சர்வதேச தரத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி இங்கிருந்து பொதுமக்களுக்கு உரையாற்றுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக நிறுவனங்களால் நியமிக்கப்படும் ஊடகவியலாளர்கள் இங்கு ஜனாதிபதி நேரடியாக கலந்துகொள்ளும் ஊடக சந்திப்புகளில் கேள்விகளைக் கேட்கலாம் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.