
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள பஸ்களுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்தை நடத்த முடியுமாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காரணத்தால் பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனினும் ஆகஸ்ட் மாதம் முதல் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போருக்காக மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கும், இந்த சேவைகளை அலுவலக நேரங்களில் நடத்துவற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.