November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கத்திற்குள் இருப்பதால் கிடைக்கப் போவது ஒன்றுமில்லை’

தொடர்ச்சியான நிராகரிப்புகளுக்கு மத்தியில் அரசாங்கத்திற்குள் அங்கம் வகிப்பதால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்கப் போவது ஒன்றும் இல்லை.அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அலையொன்று உருவாகிக் கொண்டுள்ள நிலையில், மக்களின் பக்கமே நாம் நிற்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகரும் முன்னாள் செயலாளருமான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் எமக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் இன்று மீறப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அரசாங்கத்திற்குள் ஓரங்கட்டும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் எம்மை ஏமாற்றியுள்ளனர் என கூறும் அவர், அவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரின் தவறான கருத்துக்கள்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிரான பிரசாரங்கள்,அரசாங்கத்திற்குள் எம்மை நடத்தும் விதம் குறித்து இப்போது ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதே எமது நிலைப்பாடு.

இந்த நிலைப்பாட்டில் கட்சியில் பலர் உள்ளனர்.இறுதியாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றவர்களில் ஒரு சிலரும் இதே நிலைப்பாட்டை ஆரம்பத்தில் கொண்டிருந்தனர்.

அரசாங்கத்திற்குள் எமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதை விடவும்,மக்களிடம் எமது கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும். மீண்டும் தனிக் கட்சியாக நாம் பயணிக்க வேண்டும் என்பதே நாம் இப்போது முன்னெடுக்க வேண்டிய வேலைத் திட்டமாகும்.இது குறித்து இப்போது தீர்மானம் எடுத்தால் எம்மால் அடுத்த தேர்தல்களில் பலமான கட்சியாக உருவாக முடியும்.பழைய ஸ்ரீலங்கா காரர்களை ஒன்றிணைக்கவும் முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.