இலங்கைக்கு எதிர்வரும் சனிக்கிழமை 7 இலட்சத்து 28,460 “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசிகள் கிடைக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசி தொகை நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசியின் முதல் டோஸை பெற்று 2 வது டோஸூக்காக காத்திருக்கும் 4 இலட்சத்து 90,000 பேருக்கு இந்த தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான், தமது உற்பத்தி செய்யப்பட்ட 1.4 மில்லியன் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசிகளை கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்க உறுதியளித்தது.
இதன் ஒரு பகுதியாக 7,28,460 “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்க உள்ளது.