July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொத்தலாவல மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவை மூடுங்கள்; அரச தாதியர் சங்கம் கோரிக்கை!

(file Photo )  

கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக  மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவை  மூடுமாறு அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவல் உள்ள குறைபாடுகள் காரணமாக கடமையில் அமர்த்தப்படும் தாதியர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகி வருவதாக சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு நியமிக்கப்பட்ட பதின் மூன்று தாதியர்களில் 8 பேர் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு மாதத்திற்கு முன்பு 25 தாதியர்கள் இவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தீவிர சிகிச்சை பிரிவினை சுத்தம் செய்தல் மற்றும் ஏனைய சேவைகளுக்கு சுகாதார ஊழியர்கள் சரியான முறையில் நியமிக்கப்படாமையால் இந்த சிக்கல் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து சுகாதார சேவைகள் செயலாளர் மற்றும் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு தீவிர சிகிச்சை பிரிவிற்கு தாதியர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டு வரும் நிலையில் குறைந்தபட்சம் மருத்துவர்கள் மற்றும் குறித்த வைத்தியசாலையின் ஊழியர்கள் அடங்கிய ஒரு குழுவையாவது நியமிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.