January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒலிம்பிக் பார்க்கச் சென்ற இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்’: எதிர்க்கட்சி

இலங்கையில் இருந்து ஒலிம்பிக் பார்க்கச் சென்ற இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சியின் ஊடக மாநாடொன்றில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர்கள் அவற்றை மீறி, ஜப்பான் சென்றுள்ளதாக லக்ஸ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள் தனியார் வழங்கிய நிதியுதவியில் டோக்கியோ சென்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியார் உட்பட யாரிடம் சலுகைகளைப் பெறுவதாக இருந்தாலும் பாராளுமன்றத்துக்கு அதுதொடர்பாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஒலிம்பிக் பார்க்க ஜப்பான் செல்ல சலுகைகளை வழங்கியவர்கள் குறித்து பாராளுமன்றத்துக்கு அறிவிக்காத காரணத்தினால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விடயங்களை அனுமதிக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதி இலாபங்களுக்காக பதவியை துஷ்பிரயோகம் செய்யும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.