கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டவர்கள் மட்டும் எதிர்காலத்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் வகையில் ஒரு திட்டத்தை செயற்படுத்துமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த முறையின் ஊடாக மாகாணங்களுக்கு இடையே பஸ் சேவைகளை முன்னெடுக்க முடியும் என்று அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களுக்கு பணம் செலுத்தி தற்காலிக அடையாள அட்டை ஒன்றை சுகாதார அதிகாரிகளின் தலையீட்டுடன் பெற்றுக் கொடுக்க நடவடிக்ககை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பி்ட்டார்.
இந்த திட்டத்தை கூடிய விரைவில் செயற்படுத்துமாறு வலியுறுத்திய அவர் இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி பொது போக்குவரத்தில் பயணிக்கும் பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.