
மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்களினால் யாழ்.நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
24 வருட ஆசிரியர்,அதிபர் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வு வழங்கு, இலவச கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக நீக்கு, ஆசிரியர்,மாணவர்,பெற்றோர்களை துன்புறுத்துகிற கல்வி நெருக்கடிக்கு உடனடி தீர்வினை வழங்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாடு பூராகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.