இலங்கையில் மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் மிளகாய் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மிளகாய் இறக்குமதி நிறுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அனுராதபுர பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வெளிநாட்டில் இருந்தே பெருமளவான மிளகாய் இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்த இறக்குமதியை முற்றாக நிறுத்தவே ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர், இதனால் தெரிவு செய்யயப்பட்ட 7 மாவட்டங்களில் மிளகாய் உற்பத்திகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மஞ்சள் உள்ளிட்ட சில பொருட்களின் இறக்கமதிகள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.