நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கான டொலர் கையிருப்பில் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இணையவழியாக நாட்டு நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீட்டெடுப்பதற்கு, புதிய யுகத்தை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பழைய அரசியல் வழிமுறைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது என்றும் இனவாத அரசியலை மக்கள் வெறுப்பதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் தம்மிடம் ஒரு திட்டம் இருப்பதாகவும், தாம் எதிர்கால நலனை அடிப்படையாகக்கொண்டு கதைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை முன்னேற்றுவதற்குரிய தீர்மானங்களை பாராளுமன்றத்துக்கு அறிவித்து, அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ரணில் தெரிவித்துள்ளார்.
இலங்கையிடம் வெளிநாட்டு நாணய கையிருப்பு இல்லாததால், அனைவருக்கும் தடுப்பூசி வழங்க முடியாத நிலை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாடி, வெளிநாட்டு நாணய கையிருப்பை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.