January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவிடம் இருந்து மேலும் 4 மில்லியன் சினோபார்ம் டோஸ்களை கொள்வனவு செய்கிறது இலங்கை 

இலங்கை அரசாங்கம் மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்களை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளதாக, இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி தொகை ஆகஸ்ட் மாதம் முதலாம் வாரமளவில் இலங்கையை வந்தடையும் என்றும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஒரே தடவையில் கொள்வனவு செய்யும் மிகப் பெரிய தடுப்பூசி தொகை இதுவாகும்.

சீனாவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுரகம் ஈடுபட்டுள்ளது.

இந்த 4 மில்லியன் டோஸ்கள் உள்ளடங்களாக இலங்கை சீனாவிடம் இருந்து 12 மில்லியன் தடுப்பூசி டோஸ்களைப் பெற்றுள்ளது.

அத்தோடு, சீனா இலங்கைக்கு 2.7 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.