May 28, 2025 22:38:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீடுகளில் பணியாற்றும் சிறுவர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்!

வீடுகளில் பணியாற்றும் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸாரினால் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளளது.

இதன்படி கொழும்பு உள்ளிட்ட நகர்பகுதிகளில் வீடுகளில் பணியாற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை 0112 433 433 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கிடைக்கப் பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த சிறுவர்களை பணிக்கு அமர்த்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மேல்மாகாணத்தில் வீடுகளில் பணியாற்றும் சிறுவர்களை தேடி நேற்று முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.