
File Photo
அரச வைத்தியசாலைகளில் தாதிமார் இன்று ஒரு மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதன்படி இலங்கை முழுவதும் 100 வைத்தியசாலைகளில் நண்பகல் 12 மணி முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
தாதிமாரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இனியும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தமது போராட்டங்களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.