அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்க முடியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணியாற்றுவதற்கு தயாராகுமாறு அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் 24 ஆண்டு காலமாக காணப்படுவதாகவும் இதுவரை ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என்றும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் தான் தெளிவான புரிதலைக் கொண்டுள்ளதாகவும், நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி நிலை காரணமாக விரைவான சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.