இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை நீக்குவது தொடர்பில் சுற்றுலா துறை அமைச்சு வெளியுறவு அமைச்சுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக தற்போது 21 நாடுகள் இலங்கைக்கு பயணத் தடை விதித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நோர்வே, பஹ்ரைன், நேபாளம், ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கட்டார் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பயணத்தடை நீக்குவது தொடர்பில் வெளியுறவு அமைச்சு மூலம் கலந்துரையாடலை நடத்த எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக உலகளாவிய ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பில் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, அடுத்த மாதம் முதல் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய சந்தையில் புதிய விளம்பர திட்டங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டது என்றார்.
இலங்கையில் கொவிட் -19 தடுப்பூசி இயக்கத்தை இந்த ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் நம்புகிறது. அதற்குள் மொத்த மக்கள் தொகையில் 60% மானவர்களுக்கு தடுப்பூசி வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.