
உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீல இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கிணறு வெட்டும் போதே, இந்த அரியவகை இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
510 கிலோ கிராம் எடையுடைய இந்த வெளிர் நீல நிற இரத்தினக்கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடையது என்று இரத்தினக்கல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இரத்தினக் கல்லின் உரிமையாளர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது முழுமையான பெயர், வதிவிடம் போன்றவற்றை வெளியிடவில்லை.
இந்த அரியவகை இரத்தினக்கல்லுக்கு ‘செரண்டிபிட்டி சபெயார்’ என பெயரிடப்பட்டுள்ளது.