அமெரிக்காவின் தடைகள் விதிக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் உட்சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
குலோபல் டைம்ஸ் இணையத்தள அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி, சீன தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்கா அதன் ஒருதலைப்பட்ச தடைகள் மூலம் ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தாக்கம் செலுத்துவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை, இந்தியா, சீனா உட்பட 27 நாடுகள் அமெரிக்காவின் தடைப் பட்டியலில் இருப்பதாகவும் சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எஸ்- 400 எனும் ஏவுகனைத் தொகுதியைக் கொள்வனவு செய்ததால், இந்தியாவும் அமெரிக்க தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
Xie: It is the United States, not anybody else, who is the inventor, patent and intellectual property owner of #coercivediplomacy. It is the U.S. who has engaged in broad unilateral sanctions, long-arm jurisdiction and interference in other countries' internal affairs.
🇱🇰 too pic.twitter.com/mL99JHR4kh
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) July 26, 2021