‘டெல்டா’ வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படுவதாக பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.
பதிவாகியுள்ள நோயாளர்களைவிட சமூகத்தில் நோய்த் தொற்று அதிகளவு பரவியுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் டெல்டா திரிபு, நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
டெல்டா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறினால், பாரிய ஆபத்து வரும் என்றும் பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.