ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களையும் பணிகளுக்கு அழைப்பது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
கொவிட் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அரச அலுவலங்களில் குறைந்தளவான பணியாளர்களே பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக, நிறுவன நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாதுள்ளதாக அமைச்சின் செயலாளர்கள் பலர் அறிவித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் அனைத்து அரச ஊழியர்களையும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு அதிகாரிகள் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது.
இது தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜேஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.