இலஞ்ச குற்றச்சாட்டில் இருந்து அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதியரசர் அமல் ரனராஜா இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோர் 355 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கிய சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.
இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரத்தை திருப்பிப் பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்தே, மேற்படி இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரத்தை தன்னகத்தே வைத்துக்கொண்டு, இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு வழக்கைத் திரும்பிப் பெறுவதாக மேல் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.