பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும், சிறுவர்களை சீரழிக்காதே, சிறுவர் தொழிலாளர்கள் உருவாக பிழையான கல்விக் கொள்கையும் – பொருளாதாரக் கொள்கையுமே காரணம் என்று எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கறுப்புக் கொடிகளுடன் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.